'லேடீஸ் அண்ட் லேடீஸ்' டீசர், நிறைவான வரவேற்பு
கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில் நேற்று 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' என்ற டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்த டீசர் வெளியாகி உள்ளது.
யு டியூப் தளத்தில் டீசர் வெளியாகி 24 மணி நேரம் ஆகப் போகிறது. கன்னட டீசர் 5 மில்லியன் பார்வைகள், ஹிந்தி டீசர் 14 மில்லியன், தெலுங்கு டீசர் 4 மில்லியன், தமிழ் டீசர் 3 மில்லியன், மலையாள டீசர் 2 மில்லியன், ஆங்கில டீசர் 1 மில்லியன் என மொத்தமாக 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் இது குறிப்பிடும்படியான ஒரு வரவேற்பாக அமைந்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசச் செய்யும் விதத்தில் அடுத்தடுத்து புரமோஷன் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.