உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரன் ரீ ரிலீஸ் : புதிய தேதி அறிவிப்பு

ரன் ரீ ரிலீஸ் : புதிய தேதி அறிவிப்பு

கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ரன்'. 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று ரன் படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால், அதே தேதியில் ஏ.எம். ரத்னம் தயாரித்த 'சிவகாசி' படத்தையும் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். ரன், சிவகாசி என இரண்டு படங்களும் ஏ.எம். ரத்னம் தயாரித்த படங்கள் என்பதால் ரன் படத்தின் ரீ ரிலீஸ் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ரன் படம் வருகின்ற ஜூலை 10ம் தேதியன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இதை ஜெகதம்பி நிறுவனம் வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !