உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிஸ்டம்' படத்திற்காக ஜோதிகாவிற்கு விருது

'சிஸ்டம்' படத்திற்காக ஜோதிகாவிற்கு விருது

ஜோதிகா தற்போது பாலிவுட் படங்கள், தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்காக கணவர் சூர்யாவும் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். ஜோதிகா நடித்த 'சிஸ்டம்' என்ற படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அவர் சவால் நிறைந்த ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். ஜோதிகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தை அஸ்வினி திவாரி இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தற்காக அவருக்கு 2026ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான 'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீட்ரீமிங் விருது' வழங்கப்பட்டுள்ளது. விருது குறித்துத் ஜோதிகா கூறுகையில், மொழி எல்லைகளைத் தாண்டி, நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் புதிய கதை களத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். சினிமாவில் எனது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமே இந்த விருது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !