உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் சாதிப்பாரா பெமினா ஜார்ஜ்

தமிழில் சாதிப்பாரா பெமினா ஜார்ஜ்

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படமான மின்னல் முரளி படத்தில் 'புரூஸ்லி' பிஜி என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் பெமினா ஜார்ஜ். முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து பரபரப்பு கிளப்பியவர் பெமினா ஜார்ஜ். அதன்பிறகு தீப்பொறி பென்னி, ஷேசம் மைக்கேல் பாத்திமா, கரக்கம் படத்தில் நடித்தார். தற்போது ஹெக்கூ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஏகன், மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார்.

பெமினா ஜார்ஜ் சினிமாவில் அறிமுகமாகி 5 வருடங்களாகிறது. இதுவரை 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதனால் தமிழில் வெளியாகும் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழில் நல்லதொரு இடத்தை பிடிக்க முடியும் என்றும் நம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !