உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே தொடரில் 3 காதல் கதைகள்

ஒரே தொடரில் 3 காதல் கதைகள்

விஜய் தொலைக்காட்சியில் வருகிற 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் 'காதல் காதல் காதல்' ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் உருவாகி உள்ளது. காதலை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், ஒரே தொடரில் 3 காதல்களை பிரதானப்படுத்தி எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்னத்திரை நடிகர் நலீப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். 'முத்தழகு' தொடர் நாயகி ஷோபனா, 'அண்ணா' தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, 'தங்கமகள்' தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், பாக்கியலட்சுமி தொடர் சுசித்ரா, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

காதலை வெறுக்கும் அப்பாவின் மூன்று மகன்களும் காதலிக்கிறார்கள். இதன் பின்னணியில் இந்த தொடர் வெளியாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !