உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தர்மன்' ஸ்டைலிசான படம் : இயக்குனர் சொல்கிறார்

'தர்மன்' ஸ்டைலிசான படம் : இயக்குனர் சொல்கிறார்

ரஜினி நடிக்கும் தர்மன் படத்தை இயக்குகிறார் அஸ்வத் மாரிமுத்து. இதனை கமல்ஹாசன் தயாரிக்கிறார். சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தர்மன் படம் பற்றி கூறியதாவது:

'தர்மன்' சூப்பர்ஸ்டார் படம். அதுவும் கமல்ஹாசன் தயாரிப்பு. இதனால் எனக்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறது. 20 வருடத்திற்கு முந்தைய ரஜினி அப்படியே இருக்கிறார். அவருக்கு வயதாகிவிட்டதே தெரியவில்லை. படப்பிடிப்பில் துள்ளிக்குத்து விளையாடுகிறார். 'தர்மன்' ரொம்ப ஸ்பெஷல். தமிழ் ஆடியன்ஸ், இந்தியன் ஆடியன்ஸ் எல்லாருக்குமே ரொம்ப நேர்த்தியான ஒரு படமாக இது இருக்கும். ரஜினி ரசிகர்களை எல்லா வகையிலும் திருப்பதிபடுத்தும் ஸ்டைலிசான படமாக இருக்கும்.

நிறைய இயக்குனர்களுக்கு ரஜினி படம் இயக்க வேண்டும் என்று கனவு இருக்கும், அந்த கனவு எனக்கு நிறைவேறி இருக்கு. பெரிய கடமையும் இருக்கிறது. 'தர்மன்' படம் 'பிளாஸ்ட்' ஆக இருக்கும். முதல் நாள் ஷூட்டில் காரிலிருந்து இறங்கி வந்து மருத்துவமனைக்குச் செல்வதுபோல காட்சி வைத்தோம். மானிட்டர் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரது ஸ்டைலை பார்த்து என்னை மறந்து விசில் அடித்தேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !