தனுஷ் குடும்ப வாரிசு பவிஷ்; தனி கதாநாயகனாக தடம் பதிப்பாரா?
நடிகர் தனுஷ் குடும்பத்திலிருந்து அடுத்த தலைமுறை வாரிசு நடிகராக பவிஷ் கடந்த வருடம் வெளிவந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் பவிஷ் உடன் சேர்ந்து மேலும் சில நடிகர்கள், நடிகைகள் என ஒரு இளம் பட்டளாமே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தது. தனுஷ் இயக்கிய அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.
அதற்கடுத்து பவிஷ் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'லவ் ஓ லவ்' படம் நாளை வெளியாகிறது. இப்படத்தில் தனுஷ் அண்ணன் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
தனி கதாநாயகனாக என்று பார்த்தால் இதுதான் பவிஷுக்கு முதல் படம். இந்தக் காலத்தில் காதல் படங்கள் வருவது குறைந்துவிட்டது. 20 பிளஸ் வயதில் இருக்கும் நடிகர்களும் மிக மிகக் குறைவு. அதனால்தான் காதல் படங்கள் வருவதில்லை என்பதும் ஒரு காரணம்.
அந்தக் குறையை பவிஷ் போன்ற நடிகர்கள் போக்கலாம். இப்படத்தின் மூலம் பவிஷ் தனி கதாநாயகனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தால் அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்தப் படத்தை அடுத்து பா ரஞ்சித்தின் இணை இயக்குனர் தாமு நாகபூஷணம் இயக்கத்தில் 'அட்டாக்கர்' படத்தில் நடித்து வருகிறார் பவிஷ்.