உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டில்லியில் ராமாயணா டிரைலர் வெளியீட்டு விழா

டில்லியில் ராமாயணா டிரைலர் வெளியீட்டு விழா

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் ராமாயணா படத்தின் டிரைலர் ஜூலை 18ம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒரு பிரமாண்டமான விழா மூலம் வெளியிடப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய காவியத்தின் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இந்த படத்தின் முக்கியத்துவத்தை இந்த விழா வெளிப்படுத்தும். இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோருடன் படத்தின் முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், குணால் கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்கள்.

இந்த படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 4,000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்திய தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 250 கோடிக்கு வாங்கியுள்ளது. தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா காட்டிய 30 நிமிட பிரத்யேக காட்சிகளைப் பார்த்து வியந்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உலகளாவிய விநியோகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !