உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛இதயம் முரளி' படத்திற்கு தடையில்லை : சுதா கொங்கரா வழக்கு தள்ளுபடி

‛இதயம் முரளி' படத்திற்கு தடையில்லை : சுதா கொங்கரா வழக்கு தள்ளுபடி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‛பராசக்தி'. படம் ரூ.100 கோடி வசூலித்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

இந்த படத்திற்கு தனக்கு ரூ.8.39 கோடி சம்பளம் பாக்கி இருப்பதாக கூறி ‛பராசக்தி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‛டான் பிக்சர்ஸ்' நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் சுதா கொங்கரா. அதோடு இந்த நிறுவனம் தயாரித்து, இன்று வெளியாகி உள்ள ‛இதயம் முரளி' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது ‛இதயம் முரளி' படத்திற்கு தடை விதிக்க முடியாது. ‛பராசக்தி' படத்தின் சம்பள பிரச்னையை ஒரு மத்தியஸ்தர் மூலம் பேசிக் தீர்த்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக இந்த உத்தரவு வரும் முன்பே ‛இதயம் முரளி' படம் இன்று காலை முதல் தியேட்டர்களில் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !