பிளாஷ்பேக்: கடைசி படத்தில் பாகவதர் செய்த யுக்திகள்
தியாகராஜ பாகவதர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி வெளிவந்தபோது சில படங்களில் நடித்தார். அவர் நடித்த கடைசி படம் 'சிவகாமி'. இந்த படத்தில் அவருடன் ஜி.வரலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் நடிதிருந்தார்கள். முத்தையா பிலிம்ஸ் சார்பில் பாகதவரின் நண்பர் வேணு தயாரித்தார்.
இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது பாகவதரின் கண்பார்வை மங்கியது. இதனால் படம் முழக்க கருப்பு கண்ணாடி அணிந்து நடித்தார். அதேபோல பாடமுடியாத அளவிற்கு குரல் வளத்தையும் இழந்திருந்தார். வேறொரு படத்திற்காக முன்பே பதிவு செய்யப்பட்டு, பின்னர் அப்படம் தயாரிக்கப்படாமலே போன பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார். பாடல்களுக்கு ஏற்ப கதை மாற்றப்பட்டது.
என்றாலும் கூட பாதி படம் முடிந்த நிலையில் பாகவதர் காலமானார். மீதி படத்தை அவரை போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை வைத்து லாங்ஷாட் காட்சிகளாக படம் முடிக்கப்பட்டது.