உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஐ நோபடி' படம் நன்றாக இருந்தும் வசூல் குறைவு

‛ஐ நோபடி' படம் நன்றாக இருந்தும் வசூல் குறைவு

நிசாம் பஷீர் இயக்கத்தில், பிருத்விராஜ், பார்வதி திருவோத்து, ஹகீம் ஷாஜகான், அசோகன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளத் திரைப்படம் 'ஐ நோபடி'. இப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக வந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை என்கிறார்கள்.

கடந்த நான்கு நாட்களில் இப்படம் சுமார் 14 கோடி வசூலை மட்டுமே கொடுத்துள்ளதாம். வார நாள் ஆரம்பமான நேற்று அதன் முன்பதிவு மிகவும் குறைந்தது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

வங்கிக் கொள்ளை ஒன்றை மையமாக வைத்து கணவன், மனைவி இடையிலான பிரச்சனை, காவல்துறை விசாரணை, அதில் ஒரு கருப்பு ஆடு என இப்படத்தின் கதையில் சில தளங்கள் இருந்து திரைக்கதை பயணித்தது.

மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களும் படத்தைப் பார்த்து நன்றாகவே இருக்கிறது என்றார்கள். ஆனால், பிருத்விராஜ் நடித்து வெளிவந்த முந்தைய படங்களின் வசூல் போல இல்லை என்பதால் படம் இதற்கு மேல் பிக்கப் ஆகுமா என காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சம்சூ காதர் பேட்டை
2026-07-14 12:06:22

என்ன செய்ய...சூரியா மாதிரி விதண்டாவாதம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை காயபடுத்துதல்... பலன் இதுதான்.. தற்போது சூரியாவின் நிலையை பாருங்கள்... கோயில் கோயிலாக தரிசனம்... கருப்பு என்ற படத்தில் நடித்தார் வெற்றி பெற்றார்