அஜித் 64வது படத்தில் ஸ்ரீலீலா இடம் பெறவில்லையா?
தமிழில் பராசக்தி படத்தை அடுத்து தனுஷ் உடன் ஓம் படத்தில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சமீபத்திய மாதங்களில் சில பெரிய பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் ஏற்கனவே அகில் அக்கினேனியின் லெனின் மற்றும் அனகனகா ஒரு ராஜு ஆகிய இரு வெற்றிப் படங்களின் வாய்ப்புகளை அவர் தவறவிட்டார். மேலும், விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்திற்கும் அவரே முதன்முதலில் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழில் மற்றொரு பெரிய வாய்ப்பும் அவரை விட்டுச் சென்றுள்ளதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 64 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், தற்போது தயாரிப்பாளர்கள் அந்த வேடத்திற்கு காயடு லோஹரை தேர்வு செய்துள்ளனர். இருப்பினும், இந்த செய்திகள் குறித்து ஸ்ரீலீலாவோ அல்லது படக்குழுவினரோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஸ்ரீலீலா தற்போது தனுஷின் ஓம் படத்தில் நடித்து வருகிறார்.