உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரணாசி படத்திற்கு ஹாலிவுட் படங்களால் காத்திருக்கும் சவால்

வாரணாசி படத்திற்கு ஹாலிவுட் படங்களால் காத்திருக்கும் சவால்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் வாரணாசி படம் 2027, ஏப்ரல் 7ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், முன்னணி ஹாலிவுட் படங்களின் வெளியீடு காரணமாக வாரணாசி படத்திற்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

ஏனென்றால், வாரணாசி படம் வெளியாகும் அதே காலகட்டத்தில் காட்ஸில்லா x காங் - சூப்பர்நோவா போன்ற ஹாலிவுட் படமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும். மேலும், பேனிக் கேர்புல்லி என்ற படமும் அந்த சமயத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஐமேக்ஸ் மற்றும் பிரீமியம் லார்ஜ் பார்மட் தியேட்டர்களை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும்.

ராஜமவுலியும் தனது வாரணாசி படத்தை சர்வதேச அளவில் பிரமாண்டமாக வெளியிட இலக்கு வைத்துள்ளதால், ஐமேக்ஸ் மற்றும் பிஎல்எப் திரையரங்குகளை அதிகளவில் பெறுவது வாரணாசி படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானதாகும். பொதுவாகவே ஹாலிவுட் நிறுவனங்கள் இத்தகைய பிரீமியம் திரைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துவிடும் என்பதால், இந்தியப் படமான வாரணாசிக்கு வெளியீட்டு சமயத்தில் சிறந்த திரையரங்குகளைப் பெறுவது சவாலான காரியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !