72வது தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள் : முழு விபரம் இதோ...
சிவகார்த்திகேயனின் ‛அமரன்', தனுஷின் ‛கேப்டன் மில்லர்', விஜய் சேதுபதியின் ‛மகாராஜா', கார்த்தியின் ‛மெய்யழகன்' ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளன. சிறந்த நடிகராக மம்முட்டியும், நடிகையாக யாமி கவுதமும் தேர்வாகினர்.
இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் அறிவிக்கப்பட்டன. இதன் தலைவர் ஜெயராஜ் தலைமையிலான நிர்வாகிகள் அறிவித்தனர்.
தமிழ் ஆவணப் படத்திற்கு விருது
சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருது, ‛ப்ளு' என்ற தமிழ் ஆவணப் படத்திற்காக டிஎஸ் ஹரிஹர சுதன் என்பவர் தேர்வாகி உள்ளார்.
சிறப்பு விருது வென்ற ‛மெய்யழகன்'
தேர்வுக் குழுவின் சிறப்பு விருது பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளியான ‛மெய்யழகன்' படத்திற்கு கிடைத்துள்ளது. இதேபிரிவில் இந்த படத்திற்கு சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்காக சுரன் ஜி தேர்வாகி உள்ளார்.
தனுஷ் படத்திற்கு 3 விருது
தேர்வு குழுவின் சிறந்த நடிகராக கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் தேர்வாகி உள்ளார். தவிர சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படம் தேர்வாகி உள்ளது. அதுமட்டுமல்ல சமூக மாற்றத்திற்கான பட பிரிவில் கேப்டன் மில்லர் படம் தேர்வானது.
அமரன் படத்திற்கு 3 விருது
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது.
சிறந்த படம் : ஆர்டிக்கிள் 370 (ஹிந்தி)
சிறந்த இயக்குனர் : ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த பொழுதுபோக்கு படம் : கல்கி 2898 ஏடி
சிறந்த குழந்தைகள் படம் : சின்ன கதா காடு (தெலுங்கு)
சிறந்த தேசிய, சமூக மாற்றம் படம் : கேப்டன் மில்லர் (தமிழ்)
சிறந்த அறிமுக இயக்குனர் : ரன்தீப் ஹூடா (வீர் சாவர்கர்)
சிறந்த நடிகர் : மம்முட்டி (பிரம்மயுகம்)
சிறந்த நடிகர் : கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)
சிறந்த நடிகை : யாமி கவுதம் (ஆர்டிக்கிள் 370)
சிறந்த துணை நடிகை : சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)
சிறந்த துணை நடிகர் : சஞ்சய் மிஸ்ரா (பாக்ஷாக்)
சிறந்த ஆக் ஷன் : அனல் அரசு (மகாராஜா)
சிறந்த நடனம் : விஜய் கங்குலி (ஸ்ட்ரீ 2)
சிறந்த பாடல் வரி : மனோஜ் மன்தாஷிர் (மைதான்)
சிறந்த பின்னணி இசை : ஜிவி பிரகாஷ்
சிறந்த இசை : சஷ்வத் சஜ்தேவ் (ஆர்டிக்கிள் 370)
சிறந்த ஆடை வடிவமைப்பு : புஷ்பா 2 (தீபாலி நூர், ஷீத்தல் ஷர்மா)
சிறந்த பட தயாரிப்பு : கல்கி 2898 ஏடி
சிறந்த படத்தொகுப்பு : கலைவாணன் (அமரன்)
சிறந்த ஒளிப்பதிவு : ஷகனாத் ஜீலால் (பிரம்மயுகம் - மலையாளம்)
சிறந்த ஒலி அமைப்பு : மானஸ் சவுத்ரி (புல் புல்லையா 3)
சிறந்த பின்னணி பாடகி : வைக்கம் விஜயலட்சுமி(‛அங்கு வானம் பாடல்... (ஏஆர்எம்))
சிறந்த பாடகர் : அபய் ஜோத்புர்கர்
சிறந்த வசனம் : வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த திரைக்கதை : சுகுமார் (புஷ்பா 2)
மொழி வாரியாக படங்கள் தேர்வு
சிறந்த தமிழ் படம் : ராயன்
சிறந்த தெலுங்கு படம் : கமிட்டி குர்ரோலு
சிறந்த ஒடியா படம் : லஹரி
சிறந்த மராத்தி படம் : முக்கம் போஸ்ட் மும்பிள்வாடி
சிறந்த மணிப்புரி படம் : சுனிதா
சிறந்த மலையாள படம் : பெமினிச்சி பாத்திமா
சிறந்த கொங்கனி படம் : மாக் அசூம்
சிறந்த கன்னட படம் : மித்யா
சிறந்த ஹிந்தி படம் : ஸ்ரீகாந்த்
சிறந்த குஜராத்தி படம் : மாறன்