உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருது : அர்த்தமுள்ளதாக்குகிறது - தனுஷ் ; பெருமையான நாள் - சிவகார்த்திகேயன்

தேசிய விருது : அர்த்தமுள்ளதாக்குகிறது - தனுஷ் ; பெருமையான நாள் - சிவகார்த்திகேயன்

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று(ஜூலை 18) அறிவிக்கப்பட்டன. நடிகர் தனுஷ் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 'கேப்டன் மில்லர்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான நடுவர் குழுவின் சிறப்பு விருதும், சமூக மாற்றத்திற்கான பட விருதும், சிறந்த தமிழ் படத்திற்காக அவர் இயக்கி, நடித்த 'ராயன்' படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், '' ​'ராயன்', 'கேப்டன் மில்லர்' படங்களுக்காக தேசிய விருது பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவிற்கும், ரசிகர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ​ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது. ஆகும்.

​'கேப்டன் மில்லர்' படத்திற்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் இது இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்த அங்கீகாரத்தைப் பெறுவது மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது. ​முதல்முறை என்பது எப்போதுமே மறக்க முடியாதது. 'ராயன்' படத்திற்காக ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருதை வென்றது நான் என்றும் போற்றும் ஒரு ஆசீர்வாதமாகும்.

​நான் எப்போதும் சொல்வது போல், ​எண்ணம் போல் வாழ்க்கை''

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

பெருமையான நாள் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த 'அமரன்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், ''72-வது தேசியத் திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற எனது அன்பிற்குரிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்று பெருமை சேர்த்த ஜிவி பிரகாஷ் மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருது பெற்ற கலைவாணன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் ​தேசிய விருதுகளை வென்றுள்ள தனுஷ், அருண் மாதேஸ்வரன், அனல் அரசு உள்ளிட்ட கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !