உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமீர்கானுக்கு சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா பெயரில் கொலை மிரட்டல்!

அமீர்கானுக்கு சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா பெயரில் கொலை மிரட்டல்!


ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் மூன்றாவதாக கவுரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, லவ் ஜிகாத் விவகாரத்துடன் அமீர்கானை தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு அவர், 'என்னுடைய முதல் இரண்டு மனைவிகளான ரீனா, கிரண் ராவ் ஆகியோர் தங்களது கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாற்றவில்லை. அதோடு, நாங்கள் சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு திருமணம் செய்தோம். தற்போதைய மூன்றாவது மனைவி கவுரி, இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல. கிறிஸ்தவ பின்னணியை சேர்ந்தவர். அதோடு மதத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர். அதனால் இந்த திருமணத்தை லவ் ஜிகாத் என்று கூற முடியாது' என்று விளக்கம் கொடுத்துள்ள அமீர்கான், தனது சகோதரிகள் மற்றும் மகள் இந்து ஆண்களை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த நேரத்தில் சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரின் கும்பல் பெயரில் பேஸ்புக்கில் ஒரு ஆடியோ கிளிப் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் அமீர்கான், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறார். அவரது இந்த செயல்பாடு எங்களது சனாதன தர்மத்திற்கு எதிரானது. அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு கருதி அமீர்கான் தரப்பு காவல் நிலையத்தை நாடி இருப்பதாக பாலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !