உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராகிறார் சேரன்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராகிறார் சேரன்


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு இயக்குனர் சேரனும், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதனும் போட்டியிட்டனர். துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் என மொத்தம் உள்ள 21 பொறுப்புகளுக்கு இரு அணிகள் சார்பாகவும் போட்டியிட்டனர். சங்கத்தில் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில், 483 பேர் ஓட்டளிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சென்னை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல், மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. அதன் அடிப்படையில், ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் போட்டியிட்ட சேரன், அதிக ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வானார். மொத்தம் பதிவான 432 ஓட்டுகளில் சேரன் 279 ஓட்டுகளும், வி.சி.குகநாதன் 155 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராகிறார் இயக்குனர் சேரன்.
துணைத் தலைவர்களாக 'நம்ம கே. பாக்யராஜ்' அணியின் சமுத்திரக்கனியும் (258 ஓட்டுகள்), சினேகனும் (228 ஓட்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். செயலாளராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பதிவான 422 ஓட்டுகளில் பிரபாகர் 240 ஓட்டுகளும் இயக்குனர் மனோஜ்குமார் 193 ஓட்டுகளும் பெற்றனர். 9 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !