உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் ; தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமி விருப்பம்

இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் ; தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமி விருப்பம்


சமீபத்தில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த பாடகிக்கான விருது, மலையாள பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அஜயன்டே ரெண்டாம் மோசனம்' படத்தில் இடம்பெற்ற 'அங்கு வானம் கொனிலா' என்கிற பாடலுக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இந்தப் பாடலுக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

உயர்ந்து வா உயர்ந்து வா, தடைகளை உடைத்து உயர்ந்து வா, உலகை வென்று உயர்ந்து வா என்று அர்த்தம் தரும் வரிகளைக் கொண்ட இந்தப் பாடல்தான் தன்னை நிஜ வாழ்க்கையிலும் ஊக்கப்படுத்தியது. அந்தப் பாடலுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.

மேலும் இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது தனது நீண்ட கால விருப்பம் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், ஒரே ஊரான வைக்கம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மம்முட்டியும் நானும் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

J. Vensuslaus, Nagercoil
2026-07-20 22:30:32

அந்த இருவரின் இசையமைப்பு ஒண்ணுமே இல்ல. சிறந்த பாடல் வரிகளும் உன் குரலும்தான் முக்கியம், நல்ல பாடல் உருவாக எந்த இசையமைப்பாளரும் இசையமைக்கலாம்.