உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் நாள் வசூல் : 'கூலி' சாதனை முறியடிக்கப்படுமா ?

முதல் நாள் வசூல் : 'கூலி' சாதனை முறியடிக்கப்படுமா ?

தமிழ் சினிமாவில் இதற்கு மேல் முதல் நாள் வசூல் சாதனை என்பது பற்றி பரபரப்பாகப் பேசப்படுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அப்படிய ஒரு பேச்சை, டிரெண்டை விஜய்யின் சினிமா ரசிகர்கள்தான் அதிகம் பகிர்ந்து வைரல் ஆக்கினர்.

விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கிவிட்டதால் போட்டி என்பது இப்போதைக்கு இல்லாமல் போய்விட்டது. வரும் காலங்களில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள் வந்தாலும் அவர்களுக்கு இடையிலான போட்டி என்பது இல்லை. ரஜினி - விஜய், விஜய் - அஜித் என்றுதான் போட்டி இருந்தது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாள் வசூலில் உலக அளவில் முதலிடத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் 151 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படம் 148 கோடியுடனும், 3வது இடத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 126 கோடியுடனும் உள்ளன.

நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ஜனநாயகன்' படம் முதல் நாள் வசூலாக 'கூலி' பட வசூலை முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்குமா அல்லது 'லியோ' பட வசூலை முறியடித்து விஜய்யின் படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்குமா என்பது வசூலைத் தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சாமானியன்
2026-07-21 18:03:14

ஏன் சார் இப்படி?