உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விருதுகளை தேடி செல்பவர் அல்ல தனுஷ் : இயக்குனர் கஸ்துாரி ராஜா

விருதுகளை தேடி செல்பவர் அல்ல தனுஷ் : இயக்குனர் கஸ்துாரி ராஜா

நடிகர் தனுசுக்கு தேசிய விருது கிடைத்தது சர்ச்சை ஆகியுள்ளது, குறிப்பாக, கேப்டன் மில்லர், ராயன் படங்களுக்கு விருது ஏன் என்ற கேள்வியும், விமர்சனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அவர் தந்தையும், இயக்குனருமான கஸ்துாரிராஜா...

''நடிகர் தனுஷ் விருதுகளை தேடி செல்பவர் அல்ல, இதற்கு முன்பே அவர் ஆடுகளம், அசுரனுக்கு விருது வாங்கியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் விருது கொடுக்கும்போது ஏற்றுக் கொள்ள வேண்டும், அது சந்தோஷமான நிகழ்வு. ஒரு குழுதான் அந்த விருதை தேர்ந்தெடுக்கிறது. அவருக்கு மேலிடங்களில் பேசி விருது வாங்கும் அளவுக்கு புத்திசாலிதனம் கிடையாது. அவரை விட பெரிய நடிகர்கள், பவர் உள்ளவர்கள் இருக்கிறார்களே? அவர்களால் பேசி வாங்க முடியாதா?

விருது கொடுப்பதில் விமர்சனம் வேணாம். இந்தமுறை மம்முட்டிக்கு விருது கிடைத்து இருக்கிறது. அதுவும் சந்தோஷமான விஷயம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அவர் சென்றுவிட்டார், அவர் அரசியலுக்கு வருவாரா என தெரியாது. வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அதனால் இந்தியாவுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போகிறதா? அவர் ஏதோ பண்ணுறாரு. அதில் நான் தலையிடுவது இல்லை.

ஹபீபி படத்தில் நடித்தற்கு நிறைய பாராட்டுகள். அடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். தேசிய விருது பெற்ற தனுஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன். புதுப்பேட்டை படத்தில் என்னை போலீசாக நடிக்க வைத்தார். ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நீங்கதான் தனுசை என்கவுண்டர் பண்ண துரத்த வேண்டும் என்றார். அது சினிமாவாக இருந்தாலும் அதை செய்ய பிடிக்கவில்லை. அவரிடம் சொல்லாமல் பிளைட் போட்டு சென்னை திரும்பிவிட்டேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !