உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கு ஜோதிகா சொன்ன ஆலோசனை : வெங்கி அட்லூரி சஸ்பென்ஸ்

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கு ஜோதிகா சொன்ன ஆலோசனை : வெங்கி அட்லூரி சஸ்பென்ஸ்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். அதே சமயம் இது முழுக்க முழுக்க தமிழ் படமாகவே உருவாகியுள்ளது. மாமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கி அட்லூரி கூறும்போது, இந்த கதையை பலரிடம் விவரித்து இருக்கிறேன். ஆனால் ஜோதிகாவிற்கு இந்த கதையை நான் சொன்னபோது, அவர் கதையை ரசித்தார். குறிப்பாக முதல் பாதியை பாராட்டிய அவர், கதைக்குத் தேவையான சில நல்ல ஆலோசனைகளையும் வழங்கினார். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அவர் என்ன ஆலோசனைகள் மற்றும் மாற்றங்களை சொன்னார் என்பதை படம் வெளியான பிறகு தான் வெளிப்படுத்துவேன் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !