உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி

மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி

எளிமையான குடும்பப் பின்னணி படங்களை இயக்குவதற்குப் பெயர் பெற்ற இயக்குநர் கிஷோர் திருமலா கடைசியாக 'பர்தா மஹாசாயுலகு விக்யாப்தி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், டோலிவுட்டில் வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்களின்படி, அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பக்தி மற்றும் இதிகாசக் கூறுகள் கலந்த இந்தக் கதையைப் பற்றி அவர், சாய் பல்லவியிடம் முதற்கட்டப் பேச்சைத் தொடங்கியுள்ளாராம். எப்போதுமே வலுவாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி, இந்த கதையில் நடிக்க கிரீன் சிக்னல் போட்டுவிட்டாராம்.

சமீபகாலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் அதிகரித்து வருகின்றன. ராஷ்மிகாவின் தி கேர்ள் பிரண்ட், சமந்தாவின் மா இண்டி பங்காரம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !