உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பவிஷ் நாராயணன், சமீபத்தில் லவ் ஓ லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். புதுமுக இயக்குநர் ராம் கோபால் இயக்கிய இந்த ரொமான்டிக்-காமெடி படம் கடந்த ஜூலை 10, 2026 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தற்போது தனது டிஜிட்டல் வருகைக்குத் தயாராகியுள்ளது.

இப்படம் வருகிற ஜூலை 31ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் வெளியான மூன்றே வாரங்களில் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபல தெலுங்கு யுடியூப் கன்டென்ட் கிரியேட்டரான நாக துர்கா இதில் கதாநாயகியாக நடிக்க, செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் , ஆதித்ய கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !