உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன், ராம்குமார் படத்தில் கதாநாயகி யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன், ராம்குமார் படத்தில் கதாநாயகி யார் தெரியுமா?


‛பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாக இருந்தது . ஆனால், அந்த படத்தின் கதையில் சிம்புவிற்கு திருப்தி இல்லாததால் கைவிடப்பட்டது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிற்கு கூறிய அதே கதையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதியானது.

சமீபத்தில் இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டிரெண்டிங் நடிகை கயாடு லோஹர் தான் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். சிம்பு 49வது படத்தை அறிவித்த போதும் அதில் கதாநாயகியாக கயாடு லோஹரை தான் அறிவித்தனர். இதன் மூலம் இந்த கதைக்கு நாயகியாக கயாடு லோஹர் தான் பொருத்தமாக இருப்பார் என்பது இயக்குனர் ராம்குமாரின் நம்பிக்கை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !