கமல், தனுஷ் படங்களை பற்றி ஓப்பன் ஆக பேசிய இயக்குனர் எச்.வினோத்!
இயக்குனர் எச்.வினோத் தற்போது 'ஜனநாயகன்' படம் வெளியானதை தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இப்போது ஒரு பேட்டியில் நடிகர்கள் கமல், தனுஷ் படங்கள் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, கமல் 233வது படத்தின் கதையை முழுவதும் தயார் செய்து கமல் சாருக்கு கூறினேன். அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை. அதனால் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. தனுஷ் சாருக்கு நான் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் தயாராக தான் உள்ளார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படம் தொடங்கும் பணிகள் தள்ளிப்போகிறது. என தெரிவித்துள்ளார் வினோத்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் வினோத், தனுஷ் படம் பட்ஜெட் காரணங்களால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது என்கிற மாதிரி தகவல் தெரிவித்திருந்தார். இப்போது அதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவலை தந்துள்ளார். இதனால் ரசிகர்கள் தனுஷ், வினோத் கூட்டணி படம் கைவிடப்பட்டதா? அல்லது நடைபெறுமா? என்கிற குழப்பத்தில் உள்ளனர்.