உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கானுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான 'காலா ஹிரண்' டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு

சல்மான் கானுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான 'காலா ஹிரண்' டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு


பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த 1998ல் ஜோத்பூரில் மான் வேட்டையில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதை அடிப்படையாக வைத்து தற்போது இந்தியில் 'காலா ஹிரண்' என்கிற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தற்காலிக தடை வாங்கி வைத்துள்ளது சல்மான் கான் தரப்பு. ஆனால், இந்த படத்தை எப்படியாவது வெளியிட்டே தீருவது என்று தீவிரம் காட்டும் காலா ஹிரண் படக்குழுவினர், தற்போது இந்த படம் குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இதுபோன்று தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கருப்பு மான் வழக்கை தவறாக சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ள காலா ஹிரண் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதை நீக்க வேண்டும் என்று சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த டீசர் இணையத்தில் 24 மணி நேரம் இடம்பெற்றிருந்தாலும் கூட, அது ஒருவரின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடனடியாக இந்த டீசரை சமூக வலைதளத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் நீக்க வேண்டும். இதனை நீக்கத் தவறினால் யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களை நேரில் அழைத்து அந்த இணைப்புகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !