உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஏ' சான்றிதழ் காரணமாக சென்னையில் 'ஜனநாயகன்' படக் காட்சிகள் நிறுத்தம்?

'ஏ' சான்றிதழ் காரணமாக சென்னையில் 'ஜனநாயகன்' படக் காட்சிகள் நிறுத்தம்?


கடந்த பொங்கலுக்கே திரைக்கு வரவேண்டிய விஜய்யின் 'ஜனநாயகன்' படம் கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை சென்சார் பிரச்னையில் சிக்கிக்கொண்டது. அதையடுத்து இந்த படத்துக்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கிய நிலையில், கடந்த ஜூலை 23ம் தேதி அன்று திரைக்கு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள சில தியேட்டர்களுக்கு சிலர் தங்களது 10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுடன் இப்படத்தை காண வந்துள்ளனர். இதுகுறித்த புகார்கள் எழுந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட படக்காட்சியை நிறுத்தி குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் தியேட்டர் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த பிரச்னை சென்னையில் உள்ள பல தியேட்டர்களில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, சில காட்சிகளின் தொடக்கத்தில் தாமதத்தையும் உருவாக்கியது. தணிக்கைக் குழுவின் விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்த பிறகே தியேட்டர் ஊழியர்கள் காட்சிகளைத் தொடர்ந்து திரையிட்டுள்ளனர்.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !