பிளாஷ்பேக் : ஆட்டுக்காரனை தோற்கடித்த ஆட்டுக்காரி
1997ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'ஆட்டுக்கார அலமேலு'. தேவர் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ஆர்.தியாகராஜன் இயக்கினார். ஸ்ரீபிரியா ஆட்டுக்கார அலமேலுவாக நடித்தார். சிவகுமார் நாயகனாக நடித்தார். ஒரு ஆடு செய்யும் சாதனைகள் படத்தை வெற்றிப்பட மாக்கியது. படத்தில் நடித்த ராமு என்கிற ஆடு தியேட்டர் தியேட்டாராக சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
'ஆட்டுக்கார அலமேலு' படம் ஸ்ரீபிரியாவின் கேரியரில் முதல் முக்கியமான படம். நீண்ட வருடங்களாக ரசிகர்கள் அவரை அலமேலுவாகத்தான் பார்த்தார்கள். இந்த பாதிப்பால் ஸ்ரீப்ரியா இயக்னரான பிறகு 'எங்க ஊரு ஆட்டுக்காரன்' என்ற படத்தை இயக்கினார். இதில் கனகா நாயகியாக நடித்தார், ஸ்ரீபிரியாவும் முக்கியமான கேரக்டரில் நடித்தார். சந்திரகாந்த் நாயகனாக நடித்தார்.
13 வருடங்களுக்கு பிறகு இந்தப் படம் வந்தாலும், பழைய ஆட்டுக்கார அலமேலு, படத்தை ரசிகர்கள் மறக்கவில்லை. இதன் காரணமாக அந்த படத்தோடு ஒப்பீடு ஏற்பட்டதால் அந்த அளவிற்கு படமும் இல்லை பாடல்களும் அமையவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.