உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நா.முத்துக்குமார், ஷங்கர் மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மானை நினைவு கூர்ந்த ஜிவி பிரகாஷ்

நா.முத்துக்குமார், ஷங்கர் மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மானை நினைவு கூர்ந்த ஜிவி பிரகாஷ்


கோவையில் நடந்த சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது: 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரொம்பவே ஸ்பெஷலான படம். ஏன்னா, 'சூரரைப் போற்று' படத்திற்கு அப்புறம் சூர்யா சார் கூட நானும் அவரும் சேர்ற படம். 'சூரரைப் போற்று' எங்க ரெண்டு பேருக்குமே முதல் தேசிய விருதை வாங்கித் தந்தது. அதுக்கு நான் எப்பவும் நன்றியுடையவனா இருப்பேன். அந்த சமயத்தில் சூர்யா சார் பர்சனலா எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணாங்க, அதை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன். தேங்க்யூ சோ மச் சூர்யா சார். சூர்யா சாரும் ராஜா சாரும் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க.

​அப்புறம் 'வாத்தி' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைச்சது. அது வெங்கி அட்லூரி கூட பண்ண படம். அதுக்கப்புறம் 'லக்கி பாஸ்கர்' அப்படின்ற பிளாக்பஸ்டர் படத்துக்கு அப்புறம் மூணாவது முறையா இணைஞ்சிருக்கோம். இந்த படத்துல ரெண்டு ஸ்பெஷல் போர்சஸ் என் கூட இருக்காங்க.

​இது உங்க பேமிலி எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல பீல்-குட், வார்மான படம். சூர்யா சார் ரசிகர்களுக்கு இது கண்டிப்பா ஒரு பெரிய விருந்தா இருக்கும். சூர்யா சார் பேன்ஸ் என்னை உற்சாகப்படுத்தி ஒரு செம டிராக் கேட்டதால, இன்னைக்கு 'The One' பாடலை ஸ்பெஷலா லான்ச் பண்றோம். அன்பான ரசிகர்களுக்காக ஒரு ஆக்ரோஷமான டிராக் இது. டுவிட்டர்ல நிறைய பேர் கேட்டுட்டே இருந்தாங்க. இது இங்க இருக்குற ஒவ்வொரு சூர்யா பேனுக்கும் சமர்ப்பணம். பாட்டு வந்ததுக்கு அப்புறம் உங்க எடிட், ரேஜ் எல்லாம் ஸ்டார்ட் பண்ணுங்க.

​மமிதா ரொம்பவே அடக்கமான ஒரு நபர். அவங்களை நான் ஒரு அஞ்சு வருஷமா பார்த்துட்டு இருக்கேன். 'பட்டாம்பூச்சி' சாங் உங்க டான்ஸாலேயே இன்னும் சிறப்பா மாறியிருக்கு. வாட் அ கிரேஸ்புல் டான்சர்! உங்க டான்ஸைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி நிறைய பேர் அதை ரீ-கிரியேட் பண்ண ட்ரை பண்றாங்க. இந்த படத்துல அவங்க பெஸ்ட் கொடுத்திருக்காங்க. ராதிகா மேடம் அருமையா நடிச்சிருக்காங்க.

நா.முத்துக்குமார்

எப்பவுமே முதல் படம் பண்ற பீல்லேயே இருக்குறதுதான் நல்லது. ஒரு புதுமுகமா நம்மள நினைச்சுகிட்டாதான் ரீ-டிஸ்கவர் பண்ணிக்கிட்டே இருக்க முடியும். ஒரு விஷயம் பண்ணிட்டா அதை மறந்துட்டு அடுத்து போகணும். இத்தனை வருஷம் சினிமாவுல இருந்தும் சூர்யா சார் இன்னும் பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்காரு. அவங்கதான் என்னோட இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு படமும் என்னோட முதல் படம்னு தான் நான் நினைக்கிறேன். என்னுடன் கனக்ட் ஆன​ பாடலாசிரியர்னா நா.முத்துக்குமார் சார்தான். என்னோட முதல் 50 படங்கள்ல அவரே எல்லா பாடல்களையும் எழுதினாரு. என்னோட 'சைவம்' படத்துக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வாங்கினாரு. ஐ ஆல்வேஸ் மிஸ் யூ நா.முத்துக்குமார் சார். உங்களோட வரிகளும் குரலும் எப்போதும் நினைவுகூரப்படும்.

ஷங்கர் மகாதேவன்

​என்னை கவர்ந்த பாடகர் ஷங்கர் மகாதேவன். ஏன்னா 'உருகுதே' பாட்டை அவர்கிட்ட கொண்டு போனப்ப அவர் அதை இம்ப்ரூவைஸ் பண்ண விதம் அருமை. திடீர்னு ஒரு ஹை பிட்ச்ல பாடி ஆச்சரியப்படுத்துவாரு. ஒரு பெர்பார்மரா என்னை பயங்கரமா ஆச்சரியப்படுத்தியவர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

​என் மியூசிக் ஐகான் யார் என்றால் நிச்சயமாக ஏ. ஆர். ரஹ்மான் சார்தான். சின்ன வயசுல இருந்து அவர் பாட்டைக் கேட்டு வளர்ந்திருக்கேன், அவர்கிட்ட உதவி அமைப்பாளரா வேலை பார்த்திருக்கேன். இன்னைக்கு நான் ஏதாவது விருது வாங்கினா அவர்தான் முதல் ஆளா ட்வீட் பண்ணுவாரு. ஒரு குருவா அவர் என்னை ஊக்குவிக்கிறதுதான் எனக்கு பெரிய விருது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !