உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் அடுத்த 3 பட அப்டேட்: ஆனா தயாரிப்பாளர் யாரோ?

அஜித்தின் அடுத்த 3 பட அப்டேட்: ஆனா தயாரிப்பாளர் யாரோ?


அஜித் நடித்த முதல் படம் 'பிரேம புஸ்தகம்', கோலப்புடி சீனிவாச ராவ் இயக்கிய இந்த படம் தெலுங்கு படம். இதன் படப்பிடிப்பு 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கியது. 1993ல் படம் வெளியானது. அந்த வகையில் அஜித் சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 34 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதை அஜித் ரசிகர்கள், 'அஜித் 34, ஏகே 34' என ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அது 'மங்காத்தா 2'வாக இருக்க வாய்ப்பு. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்கு அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். அது அடுத்த ஆண்டு கோடையில் தொடங்கும். ஆக அஜித் கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார் என கூறப்பட்டாலும், இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர் யார்? எப்போது படப்பூஜை? எப்போது படப்பிடிப்பு தொடக்கம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !