உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!


சசி இயக்கத்தில் 'பிச்சைக்காரன்' படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'நூறு சாமி'. இப்படத்தில் அவருடன் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். கடந்த ஜூன் 19ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் உலக அளவில் 15 கோடி வசூலித்தது.

இந்நிலையில் தற்போது நூறு சாமி படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் சுமாரான வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த போதிலும், இப்படத்தின் கதைக்களம் குறிப்பிட்ட பிரிவு பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் இந்த ஓடிடி வெளியீட்டின் மூலம் இப்படம் மேலும் பலதரப்பட்ட மக்களை போய் சேரும் என்று படக்குழு எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !