உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேண்டஸி படத்தில் தேவதையாக நடிக்கும் சித்தி இத்னாணி

பேண்டஸி படத்தில் தேவதையாக நடிக்கும் சித்தி இத்னாணி


சிம்புவுக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்தவர் நடிகை சித்தி இத்னாணி. அதில் இடம்பெற்ற 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' என்கிற பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றார். அதன்பிறகு ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்', அருண் விஜயின் 'ரெட்டை தல' ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது அறிவியல் பேண்டஸி படமாக உருவாகி வரும் 'ட்ரோன்ஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சித்தி இத்னாணி தேவதையாகவும், தேவதர்ஷினி மந்திரவாதியாகவும், குரேசி விஞ்ஞானியாகவும் நடிக்கின்றனர். 'பன் பட்டர் ஜாம்' படத்தை இயக்கிய ஆர்.ராகவ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதை ஒரே ஜானருக்குள் அடங்காது என்றும், இதில் விஞ்ஞானிகள், தேவதைகள் மந்திரவாதிகள் மற்றும் துப்பறிவாளர்கள் என பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இதில் நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் இயக்குனர் ராகவ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !