உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழுக்கு வரும் சோனா ஒலிக்கல்

தமிழுக்கு வரும் சோனா ஒலிக்கல்

கேரளாவில் சேர்ந்த பிரபல மாடல் அழகி சோனா ஒலிக்கல். விளம்பரப் படங்களில் நடித்து வந்த இவர் 'வெயில்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவர் இதில் ஷேம் நிகாம் ஜோடியாக நடித்தார். பின்னர் 'ஓ மேரி லைலா' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார்.

தற்போது 'ஒன்ஸ்மோர்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கி உள்ளார். அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இதில் இன்னொரு நாயகியாக சோனா நடித்துள்ளார். வரும் 28ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !