உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னம் இயக்கும் படம் அந்த கதையின் தழுவலா?

மணிரத்னம் இயக்கும் படம் அந்த கதையின் தழுவலா?


மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் நடந்து வருகிறது. இது பக்கா காதல் கதை. தனது வழக்கமான பாணியில் வித்தியாசமாக அதை அவர் எடுக்கிறாராம். இதற்கிடையில் இந்த படம் 'கிரேஸ் ஸ்டுப்பிட் லவ்' என்ற படத்தின் தழுவல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படம் 2011ல் வெளியானது. க்ளென் பிகாரா, ஜான் ரெகுவா இயக்க, ஸ்டீவ் கார்ல் ரியன் காஸ்லிங், ஜூலியன் மூர், எம்மா ஸ்டோன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
நடுத்தர வயதான ஹீரோவிடம் அவர் மனைவி விவாகரத்து கேட்கிறார். அப்போது ஒரு இளைஞன் உதவியால் தனது தவறுகளை அவர் சரி செய்கிறார். விவாகரத்து கிடைத்ததா? இருவரும் இணைந்தார்களா என்பதே கதை. அந்த நடுத்தர வயது ஆளாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவர் மனைவியாக சாய்பல்லவி வருகிறார். அந்த இளைஞர் கேரக்டரில் நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள் கோலிவுட்டில். ஆனால், இது குறித்து மணிரத்னம் தரப்பில் இருந்து எதுவும் சொல்லப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !