உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப் போகும் 'ஹாய்' பட வெளியீடு ??

தள்ளிப் போகும் 'ஹாய்' பட வெளியீடு ??


கவின், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில், பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ஹாய்'. இப்படம் ஆகஸ்ட் 14ல் வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் படம் அன்றைய தேதியில் வெளியாகாது என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஆகஸ்ட் 14ம் தேதியன்று சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', மற்றும் விஷால் நடித்துள்ள 'மகுடம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன.

அந்தப் படங்களுடன் மோதினால் சரியான வெற்றி கிடைக்காது என தற்போது நினைக்கிறார்களாம். மேலும் படத்திற்கான 15 கோடி சிக்கல் ஒன்று வேறு உள்ளதாம். அதைத் தீர்த்துவிட்டு எந்த போட்டியும் இல்லாத ஒரு நாளில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள்தான் இந்த 'ஹாய்' படத்தையும் இணைந்து தயாரித்துள்ளன. அந்தப் படமே சில பல சிக்கல்களை சந்தித்த பின்புதான் வெளியானது. அந்தப் படத்தின் ரிசல்ட், வருவாய் சிக்கலும் தற்போது 'ஹாய்' படத்திற்கு வந்து நிற்கிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !