கதாநாயகனாக வெற்றி பெறுவாரா லோகேஷ் கனகராஜ்?
தமிழ் சினிமாவின் இன்றைய கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இயக்கியுள்ள ஆறு படங்களில் 'மாஸ்டர், லியோ' என இரண்டு படங்களில் விஜய்யையும், 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனையும், 'கூலி' படத்தில் ரஜினிகாந்த்தையும் இயக்கியுள்ளார்.
இயக்குனர்கள் நடிகர்களாகவும் மாறி நடித்து வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 'இனிமேல்' என்ற ஆல்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது முழு கதாநாயகனாக அவர் நடித்துள்ள 'டிசி' படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
இயக்குனரான தடம் பதித்த லோகேஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் தடம் பதிப்பாரா என்பது நாளை தெரிந்துவிடும். தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிப்பாரா என்பது இப்படத்திற்குக் கிடைக்கவிருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அமையும்.
அடுத்து இயக்குனராக அல்லு அர்ஜூனை இயக்க உள்ளார். 'டிசி' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தின் வேலைகள் பரபரப்பாக ஆரம்பமாக உள்ளது.