ஓணம் பண்டிகையில் வெளியாகும் 3 படங்கள் ; கனமழையை சமாளிக்குமா?
கேரளாவில் வரும் ஆகஸ்ட் 16 முதல் ஓணம் பண்டிகை துவங்க இருக்கிறது. இந்த வருட ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக பிரித்விராஜின் 'கலிபா', துல்கர் சல்மானின் 'ஐ'ம் கேம்' மற்றும் நிவின்பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் கலிபா மற்றும் ஐ'ம் கேம் கமர்சியல் ஆக்சன் படங்களாகவும், பெத்லகேம் குடும்ப யூனிட் குடும்பப் பாங்கான கதையுடனும் உருவாகியுள்ளது.
இப்படி மூன்று படங்கள் வெளியாவது கேரள திரையரங்குகளுக்கு வசூல் கொண்டாட்டம் என்றாலும் கூட, சமீப நாட்களாகவே கேரளாவில் கன மழை பெய்து வருகிறது ஓணம் பண்டிகை சமயத்திலும் மழை நீடிக்கும் என்பதால் இந்த மூன்று படங்களும் அந்த சவாலை எதிர்கொண்டு எப்படி சாதிக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த வருடம் இதே போல ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' கிட்டத்தட்ட 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.