உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண்

புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண்

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து கடந்த ஜூன் மாதத்தில் வெளியான படம் பெத்தி. அதன்பிறகு தனது மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதிலிருந்து முழுமையாக வெளியே வந்து விட்டார். அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண்.

ஆர்சி 17 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக ராம் சரணை குறைந்தபட்சம் 8 கிலோ எடையை குறைக்குமாறு இயக்குனர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை காத்திருந்த ராம் சரண், தற்போது தேவையான எடையைக் குறைப்பதற்காக சிறப்பு உணவு முறை மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் சுகுமார் இப்படத்தின் திரைக்கதை பணிகளை முடித்துவிட்டு, தற்போது படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கதாநாயகியாக நடிக்க, சாரா அர்ஜுன் மற்றும் ருக்மிணி வசந்த் உட்பட சில நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !