மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக வாமிகா கவி நடித்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான படம் டிசி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கும் வாமிகா கவி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் அடிவி சேஷ் நடிப்பில் உருவாகி வரும் கூடச்சாரி என்ற ஸ்பை திரில்லர் படத்தின் இரண்டாம் பாகமான ஜி2-வில் தற்போது கமிட்டாகி இருக்கிறார் வாமிகா கபி. இந்த படத்தில் மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர், அவர் சர்தார் -2 படத்தில் அப்போது பிசியாக நடித்து வந்ததால் அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகையை பரிசீலனை செய்து வந்துள்ளார்கள். இந்த நேரத்தில் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்க ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், டிசி படத்தில் நடித்திருந்த வாமிகா கபி குறித்து சொன்னதும், ஜி2 படக்குழு வாமிகா கபியை அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த படமும் சர்தார் 2 படத்தை போன்று ஸ்பை திரில்லர் கதையில்தான் உருவாகி வருகிறது.