உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' ஓடிடி ஒப்பந்தம் முடிந்தது! விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' ஓடிடி ஒப்பந்தம் முடிந்தது! விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!


வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் விஸ்வாம்பரா. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, விஸ்வாம்பரா படத்தின் வெளியீட்டிற்கு மிக முக்கியத் தடையாக இருந்த ஓடிடி ஒப்பந்தத்தை தயாரிப்பாளர்கள் இறுதி செய்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இதன் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதனால் படக்குழுவினர் தற்போது புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கத் தயாராகி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத், ஈஷா சாவ்லா, சுரபி புராணிக் மற்றும் ரம்யா பசுபுலேட்டி, ராவ் ரமேஷ், வெண்ணெலா கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி மற்றும் கவுரஹரி இணைந்து இசையமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !