'வாரணாசி' படம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த பிரித்விராஜ் சுகுமாரன்!
எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'வாரணாசி' படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், இந்த படம் வெறும் டைம் டிராவல் பற்றியது மட்டுமல்ல, அதைத் தாண்டிய பல காலக்கட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்று பிரித்விராஜ் கூறினார்.
மேலும், இயக்குநரின் பார்வையைப் பாராட்டிய அவர், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எஸ்.எஸ்.ராஜமவுலி போன்ற ஒரு வித்தியாசமான இயக்குநர் இவ்வளவு பிரமாண்டமான முயற்சியை மேற்கொள்வதைக் காண்பது வியப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் இணைந்து நடிப்பதைக் பெருமையாக கருதுவதாகவும் பிரித்விராஜ் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.