உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8வது வாரத்தில் ஹவுஸ்புல் ஆன 'ஜனநாயகன்' !!!

8வது வாரத்தில் ஹவுஸ்புல் ஆன 'ஜனநாயகன்' !!!


எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமாக ஜூலை 23ம் தேதி வெளியான படம் 'ஜனநாயகன்'. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்தது என்று சொல்லப்பட்டாலும், அதிகாரப்பூர்வ வசூல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

இப்படம் இணையதளங்களில் ஏற்கெனவே திருட்டுத் தனமாக வெளியான காரணத்தாலும், விஜய்யின் அரசியல் வருகை, தெலுங்குப் படத்தின் ரீமேக் என்ற காரணங்களாலும், படமும் சுமாராக இருந்ததாலும் பெரிய வசூலைக் குவிக்கவில்லை.

ஓடிடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியான பின்பும் விஜய்யின் படங்கள் தியேட்டர்களில் சில வாரங்கள் ஓடுவது வழக்கம்.

இந்த 'ஜனநாயகன்' படம் சென்னையில் ரோகிணி தியேட்டரில் மட்டும் தினமும் மாலை காட்சியாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வார இறுதிக் காட்சி ஹவுஸ்புல் ஆகியதாக தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான நிகிலேஷ் சூர்யா, சற்று முன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜனநாயகன்' திரைப்படம் தனது 8வது வார இறுதியிலும் அனைத்துக் காட்சிகளும் முழுமையாக நிரம்பி ஓடியது.

சமீப காலங்களில் எந்தவொரு திரைப்படத்திற்கும் இது போன்றதொரு நிகழ்வு நடந்ததாகத் தெரியவில்லை.

இத்திரைப்படம் இத்தகைய சிறப்பான ஓட்டத்தைத் தொடரும் வரை, வார இறுதி நாட்களுக்கான காட்சிகள் தொடர்ந்து திரையிடப்படும்,” என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Kavi Priyan Adelaide
2026-09-15 16:19:42

என்ன பன்றது. நம்பி தானே ஆகனும்..