டபுள் ஆக்குபன்சி
தயாரிப்பு: அவ்னி மூவிஸ்
இயக்கம்: அஸ்வின் கந்தசாமி
நடிப்பு: சந்தோஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா, விடிவி கணேஷ், பக்ஸ்
ஒளிப்பதிவு: சாந்தகுமார் சக்ரவர்த்தி
இசை: சாம் சி.எஸ்
வெளியான தேதி: ஜூன் 12, 2026
நேரம்: 2 மணி 12 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5
போஸ் வெங்கட், வினோதினி தம்பதிக்கு பிறக்கு குழந்தை வினோதமாக இருக்கிறது. பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறுகிறது. அந்த குழந்தை வளர்ந்தவுடன் சென்னையில் வசிக்கிறது. பகலில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மாவை, ஆராய்ச்சியாளர் வினோத் கிஷன் காதலிக்கிறார். இரவில் ஆணாக மாறும் சந்தோசை, ஆடை வடிவமைப்பாளரான சம்யுக்தா காதலிக்கிறார். ஆனாலும் தங்கள் ரகசியத்தை சொல்ல முடியாமல் சந்தோஷ், ரேஷ்மா தவிக்க, இவர்களின் காதலர்களுக்கு 'உண்மை' தெரிந்ததா? கடைசியில் காதலில் வெற்றி பெற்று திருமணத்தை சந்திக்கும் ஜோடி எது என்பது டபுள் ஆக்குபன்சி கதை.
புது முகம் அஸ்வின் கந்தசாமி இயக்கிய படம் இந்த கதையில் பேண்டசி, காதல், சண்டை, கலகலப்பு, கல்ல்ர்புல் பாடல், செண்டிமெண்ட் என எல்லாம் இருக்கிறது. முகம் சுளிக்கும் விஷயங்கள், ஆபாச காட்சிகள் இல்லாதது ஆறுதல்
ஹீரோவாக வரும் சந்தோஷ் பாரில் வேலை செய்பவராக வருகிறார். அவரின் காதல் காட்சி, இந்த உருவமாற்ற பிரச்னையால் அவர் தத்தளிக்கிற காட்சி, சில சமயம் எமோசனலாக புலம்பும் இடங்கள் செட்டாகி இருக்கிறது. குறிப்பாக தொழிலதிபரான வி டி வி கணேஷ், அவருக்குமான காமெடி படத்தை கலகலப்பாக்கி இருக்கிறது..சில இடங்களில் அவர் இன்னும் நடித்து இருக்கலாம். அவர் ஜோடியாக வருகிற சம்யுக்யா காஸ்ட்யூம், நடிப்பில் ஸ்டைல் ஆக, ஹாட் ஆக இருக்கிறார். இன்னொரு ஹீரோ வினோத் கிஷன் உருவபிரச்னையில் காதலி ரேஷ்மாவிடம் சிக்கி தவிக்கிற இடங்கள், அவர் சந்தேகப்படும் இடங்கள் நச். அவரை விரும்பு ரேஷ்மா படம் முழுக்க நல்ல நடிப்பை தந்து கதையை நகர்த்தி இருக்கிறார். வில்லன் களாக பக்ஸ், விச்சு வருகிறார்கள். அதில் விறுவிறுப்பு இல்லை. அதெல்லாம் படத்தின் மைன்ஸ்.
காதல், காமெடி என நகரும் கதையில் அவ்வப்போது டச்சிங் சீன் களும் வருகிறது. ஆனால் அந்த ஆக்சன் செட் ஆகவில்லை. குறிப்பாக மரபணு, வில்லன் டீலிங், மாத்திரை, எபக்ட் இதெல்லாம் போரடிக்கிறது.
கிளைமாக்ஸ் இதே பாணியில் , சுந்தர் சி பட பாணியில் ஜாலியாக முடியும் என எதிர்பார்த்தால் ஆபரேசன், அது இது என கதையை மாற்றி, வேறுபாதைக்கு படத்தை மாற்றி இருக்கிறார் கிளைமாக்சை இன்னும் எளிமையாக எடுத்து இருந்தால் படம் ஹிட்டாகி இருக்கும்.
படத்தை சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு அழகாக்கி இருக்கிறது . பார் காட்சிகள், பாடல் காட்சிகள் அழகு. அதே சாம் சி.எஸ் இசை, காதல் பாடல் படத்தை இளமை ஆக்கி, யூத் ஆடியன்சிடம் கொண்டு போய் சேர்க்கிறது.
பேண்டசி கதையில் காதல், காமெடி ஓகே, ஓவர் செண்டிமெண்ட், கிளைமாக்ஸ் சீரியஸ் காட்சியை மாற்றி இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம். இடைவேளைக்குபின் ஆங்காங்கே போராடிக் கிறது.ஆனாலும் பல இடங்களில் கொஞ்சம் கலகலவென கொண்டு போய் இருப்பது பிளஸ். ஆண், பெண்ணாக மாறும் இருவரின் பெயர் ரஜினி. கிளைமாக்சில் கமல் பெயரும் வருகிறது. குஷ்புவும் கவுரவ வேடத்தில் வருகிறார். இப்படி சில கமர்சியல் கண்டண்ட்டும் இருக்கிறது
டபுள் ஆக்குபன்சி - ஆஹா ஒஹோ இல்லை... மோசமும் இல்லை...