Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த குறையும் வைக்கக்கூடாது!

மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த குறையும் வைக்கக்கூடாது!

மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த குறையும் வைக்கக்கூடாது!

மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த குறையும் வைக்கக்கூடாது!

PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சென்னை நுங்கம்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பாதுகாப்பான, தற்காலிக புகலிட மையம் நடத்தி வரும், மாற்றுத்திறனாளி மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி தான் எங்க பூர்வீகம். அப்பா புஜங்க ராவ், சென்னை கலெக்டராக இருந்தவர்.

அவருடைய வேலை காரணமாக, சிறு வயது முதலே சென்னைவாசியாக இருக்கிறேன். 3 வயதில் எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது.

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், மருத்துவப் படிப்பில் சேர்ந்து குழந்தைகள் நல மருத்துவமும், மேற்படிப்பும் முடித்தேன்.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத அந்த காலகட்டத்தில், பாதிக்கப் பட்ட மக்களை குழுக்களாக ஒன்று சேர்த்து, அவர்கள் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது, நிதி திரட்டி மருந்துகள் வாங்கி கொடுப்பது என, இயங்க ஆரம்பித்தேன்.

அதன்பின், 'டார்கஸ் ரிசர்ச் சென்டர்' ஆரம்பித்து, மாற்றுத்திறன் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆரம்பித்தேன்.

'சென்னையில் ஓரிடத்தில் ஒருவேளை உணவுடன், ஒரே நேரத்தில், 50 மாற்றுத் திறன் பெண்களுக்கு புகலிடம் கொடுத்து பார்த்துக் கொள்ள தங்குமிடம் வேண்டும்' என, விண்ணப்பம் ஒன்றை சென்னை மாநகராட்சி யிடம் கொடுத்திருந்தோம். 2015ல் எங்கள் விண்ணப்பத்தை அங்கீகரித்தனர்.

இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பாழடைந்த பள்ளி கட்டடம். இதை நாங்களே தேடிக் கண்டுபிடித்து கேட்டு வாங்கி, இந்த மையத்தை நடத்தி வருகிறோம்.

கிராமத்தில் இருந்து சென்னை மாதிரியான நகரத்துக்கு வரும் மாற்றுத்திறனாளி பெண், கையில் காசு இல்லாத நிலையிலும் பாதுகாப்பாக தங்க ஓர் இடம் வேண்டுமெனில் எங்களை அணுகலாம்.

இங்கு வந்து தங்கி படிக்கலாம், வேலைக்கு செல்லலாம், விளையாட்டு பயிற்சிக்கு தயாராகலாம். 'வீட்ல இருக்க பிடிக்கலை, என்னை மோசமாக நடத்துகின்றனர்' என்ற நிலை யிலும் இங்கு வரலாம்.

தற்போது, 58 பேர் இங்கு இருக்கின்றனர் . இப்போது நாங்கள் இருக்கும் இடம் அரசு கட்டடம்.

எப்போது வேண்டு மானாலும் இதில் மாற்றம் வரலாம். அதனால், சொந்தமாக ஓரிடம் வாங்கி, தங்குமிடம் ஆரம்பிக்க வேண்டும்.

அதில், பணம் கட்ட தயாராக இருப்போருக்கு, 50 சதவீத இடமும், 50 சதவீத இடத்தை வசதி யில்லாதவர்களுக்கு இலவசமாகவும் கொடுக்கணும்.

இவர்களுக்கு இதுபோதும் என்று நினைக்கிற மாதிரி, எந்த குறையும் வைக்கக்கூடாது. இதுதான் என் அடுத்த இலக்கு!

தொடர்புக்கு

96772 22277





      Our Apps Available On




      Dinamalar

      Follow us