'வங்கி செயலியை பின்தள்ளிய பேமென்ட், கடன் செயலிகள்'
'வங்கி செயலியை பின்தள்ளிய பேமென்ட், கடன் செயலிகள்'
'வங்கி செயலியை பின்தள்ளிய பேமென்ட், கடன் செயலிகள்'
ADDED : செப் 26, 2025 01:18 AM

புதுடில்லி:வங்கிகளின் செயலியை விட அதிகமாக, பணம் செலுத்தும் பேமென்ட் மற்றும் கடன் பெறும் லெண்டிங் செயலிகளையே வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்கள் போனில் நிறுவி இருப்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வருமாறு:
பேமென்ட், லெண்டிங், பேங்க்கிங் ஆகிய மூன்று நிதி தொடர்பான துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பேமென்ட் அல்லது தனிநபர் கடன் தருவதை முதன்மை வணிகமாக கொண்ட 11 செயலிகள், வங்கி செயலிகளைவிட அதிகமாக வாடிக்கையாளர்களால் செல்போனில் நிறுவப்பட்டுள்ளன.
நிதித்தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்த 60 லட்சம், வாடிக்கையாளர் கருத்து பதிவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டன. ஒரு நட்சத்திர பதிவு மட்டுமே கொண்ட பதிவுகள் ஐந்தில் ஒன்றாக இருந்தன. ஐந்து நட்சத்திர பதிவு கொண்டவை 67 சதவீதம். இது நிதித்தொழில்நுட்ப நிலவரத்தின் உச்சபட்ச நிலவரத்தை காட்டுவதாக உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.