முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
ADDED : ஜூலை 12, 2024 02:43 AM

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம் இன்று நடக்கிறது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியிரின் 3வது மகன் ஆனந்த், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.
திருமணம் வரும் மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12-ம் தேதி ) துவங்கி வரும் 14ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.