சுட்டெரிக்கும் வெயிலால் கோழிகள் சாவு சுகாதார சீர்கேடால் நோய் பரவும் ஆபத்து
சுட்டெரிக்கும் வெயிலால் கோழிகள் சாவு சுகாதார சீர்கேடால் நோய் பரவும் ஆபத்து
சுட்டெரிக்கும் வெயிலால் கோழிகள் சாவு சுகாதார சீர்கேடால் நோய் பரவும் ஆபத்து
ADDED : ஜூன் 02, 2024 06:04 AM
பங்கார்பேட்டை: 'கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் உயிரிழந்த கோழிகளை ஆங்காங்கே வீசுவதால், நோய் பரவும் ஆபத்து ஏற்படும்' என, காஜக கிராமத்தினர் புகார் செய்துள்ளனர்.
பங்கார்பேட்டையின் பூதிகோட்டை ஆலம் பாடி ஜோத்தேனஹள்ளி, காஜக கிராமத்தில் கோழிப் பண்ணைகள் உள்ளன. வழக்கத்தை விட, இம்முறை வெப்பம் அதிகரித்திருந்தது. இதனால் கோழிப் பண்ணைகளில் வெப்பம் தாங்க முடியாமல், கோழிகள் இறக்கின்றன.
இறந்த கோழிகளை, பள்ளம் தோண்டி புதைக்காமல், ஆங்காங்கே வீசி எறிகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளது. இறந்த கோழிகளை தின்பதற்கு, தெருநாய்கள் சுற்றி அலைகின்றன. அப்பகுதிகளில் கிராம மக்கள் நடமாட முடியவில்லை.
ஏரிகள், ஏரிக்கரையில் இறந்த கோழிகளை வீசி எறிவதால், ஏரியின் நீர் மாசுபடுகிறது. கால்நடைகளையும் நோய் தாக்கும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலம்பாடி கிராம பஞ்சாயத்தில் காஜக கிராம மக்கள், புகார் செய்துள்ளனர்.
கிராம சுகாதார சீர்கேட்டை தடுக்க, பங்கார்பேட்டை தாசில்தார் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.