விமான சக்கரத்தில் பதுங்கியபடி டில்லிக்கு வந்த ஆப்கன் சிறுவன்
விமான சக்கரத்தில் பதுங்கியபடி டில்லிக்கு வந்த ஆப்கன் சிறுவன்
விமான சக்கரத்தில் பதுங்கியபடி டில்லிக்கு வந்த ஆப்கன் சிறுவன்
ADDED : செப் 24, 2025 06:28 AM

புதுடில்லி : ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 13 வயது சிறுவன், விமானத்தின் பின் சக்கரப்பகுதியில் பதுங்கி, இரண்டு மணி நேரம் பயணித்து, டில்லி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து, நேற்று முன்தினம் காலை அந்நாட்டை சேர்ந்த, 'காம் ஏர்லைன்ஸ்' என்ற தனியார் விமானம் பயணியருடன் புறப்பட்டது. இரண்டு மணி நேர பயணத்துக்கு பின், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சற்று நேரத்தில், 13 வயது சிறுவன் ஒருவன், அந்த விமானத்தை சுற்றி வந்தான். அவனை விமான நிறுவன ஊழியர்கள் பிடித்து விசாரித்ததில், ஆப்கானின் குண்டூஸ் நகரை சேர்ந்த அந்த சிறுவன், விமானத்தின் பின் சக்கரத்தின் இடையே இருந்த பகுதியில் பதுங்கி இந்தியா வந்ததாக தெரிவித்தான்.
இதையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அவனை பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். சற்று நேரத்தில் காபூல் புறப்பட்ட அதே விமானத்தில் சிறுவனை அதிகாரிகள் அவனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக விமானத்தில் சதி செயலில் ஈடுபட்டானா என்பது குறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவன் பதுங்கி வந்த, 'லேண்டிங் கியர்' எனப்படும், பின் சக்கர பகுதியை சோதனையிட்டபோது அதில், அவன் எடுத்து வந்த சிவப்பு நிற ஸ்பீக்கரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து விமானத்தை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகள் சதி செயலுக்கான அறிகுறி இல்லாததை அடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பானதாக அறிவித்தனர்.