ADDED : செப் 24, 2025 07:15 AM

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை தான்; மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு மக்களின் நம்பிக்கையை பெறாமல், ஓட்டுத் திருட்டின் வாயிலாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எனவே, இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை பெற போராடுவதுடன் ஓட்டுத் திருட்டுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
நம்பிக்கையற்ற ராகுல்!
காங்., தலைவர் ராகுல், தேர்தல் கமிஷன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன், நாடு முழுதும் அதற்கு எதிராக அவதுாறு கருத்துகளை பரப்புகிறார். முன்னதாக பார்லிமென்ட், லோக்சபா சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டிய அவர், அரசியலமைப்புகள் மீது நம்பிக்கையற்றவராக உள்ளார். அர்ஜுன் ராம் மேஹ்வால் மத்திய அமைச்சர், பா.ஜ.,
அவநம்பிக்கையை ஏற்படுத்தும்!
தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டி, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். அவர், குற்றச்சாட்டு எழுப்பும்போதெல்லாம் பா.ஜ.,வினர் அதற்கு பதில் அளிக்கின்றனர். இது, தேர்தல் கமிஷன் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய செயல். சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு