ஏர் இந்தியா விமான விபத்து: துருக்கி அரசு விளக்கம்
ஏர் இந்தியா விமான விபத்து: துருக்கி அரசு விளக்கம்
ஏர் இந்தியா விமான விபத்து: துருக்கி அரசு விளக்கம்

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட 270 பேர் பலியாகினர்.
விபத்துக்குள்ளான போயிங் - 787 ரக விமானத்தை, துருக்கியைச் சேர்ந்த விமான பராமரிப்பு நிறுவனம் பராமரித்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த ரக விமானங்களை 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பராமரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அதில் கூறப்பட்டது.
இந்தியா வந்துள்ள துருக்கியின் விபத்து புலனாய்வு பணியகக் குழுவினர், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
விபத்துக்குள்ளான போயிங் 787- ரக விமானம், துருக்கி தொழில்நுட்பக் குழுவால் பராமரிக்கப்பட்டது என்று கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல. இந்த கருத்துக்கள், துருக்கி - இந்திய இடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் கூறப்பட்டு உள்ளது.
ஏர் இந்தியா மற்றும் துருக்கி விமான தொழில்நுட்பக் குழுவினர் இடையே, 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் கீழ், பி 777 ரக விமானங்களின் பரந்த உடற்பகுதிகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் எங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.